நடிகர் விவேக் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

நடிகர் விஜய் வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். இதனிடையே மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.;

Update: 2021-04-26 08:14 GMT

நடிகர் விஜய் வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். இதனிடையே மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 16ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


 



இதனிடையே ஏப்ரல் 17ம் தேதி அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

அது மட்டுமின்றி லட்சக்கணக்கான ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது நடிகர் விஜய் ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் அஞ்சலி செலுத்த வரமுடியாத சூழல் உருவாகியது.


 



இந்நிலையில், நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் இன்று நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News