சொகுசு காருக்கு ரூ.40 லட்சம் நுழைவு வரி செலுத்திய நடிகர் விஜய் !
இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ம் ஆண்டு நடிகர் விஜய், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கியிருந்தார். வாகன பதிவுக்காக ஆர்டிஓ அலுவலகம் சென்றபோது நுழைவு வரி தொடர்பான ஆட்சேபனை இல்லா சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி ஆர்டிஓ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு, நடிகர் விஜய் ரூ.40 லட்சம் நுழைவு வரி செலுத்தியுள்ளதாக வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ம் ஆண்டு நடிகர் விஜய், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கியிருந்தார். வாகன பதிவுக்காக ஆர்டிஓ அலுவலகம் சென்றபோது நுழைவு வரி தொடர்பான ஆட்சேபனை இல்லா சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி ஆர்டிஓ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இறக்குமதி காருக்கு நுழைவு வரியை செலுத்தினால், சான்றிதழ் வழங்குவதாக வணிவரித்துறை உதவி கமிஷ்னர் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், விஜய் நுழைவு வரியாக 40 லட்சத்தை செலுத்தியுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது பற்றி வணிகவரி அதிகாரிகள் கூறும்போது: இறக்குமதி காரை பதிவு செய்ய நுழைவு வரி செலுத்தியதற்கான ரசீதும், ஆட்சேபனை இல்லா சான்றிதழும் அவசியம். இது அனைத்து இறக்குமதி கார்களுக்கும் பொருந்தும். அதன்படி நடிகர் விஜய் தனது காருக்கு மொத்தம் ரூ.40 லட்சம் நுழைவு வரி செலுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar
Image Courtesy: தினமலர்
https://www.dinamalar.com/news_detail.asp?id=2820232