நடிகர் விஜய் 65வது படத்தில் ஜோடியாக இணையும் பூஜா ஹெக்டே.!

இந்த படத்திற்கான முதற்கட்ட வேலைகள் தயாராகியுள்ளது. படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2021-03-25 05:56 GMT

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 65வது படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவர் கோலமாவு கோகிலா, டாக்டர், உட்பட பல்வேறு படங்களை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். தற்போது நடிகர் விஜய் 65வது படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கான முதற்கட்ட வேலைகள் தயாராகியுள்ளது. படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




 


இந்நிலையில், நடிகர் விஜய் உடன் நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பூஜா ஹெக்டே, தமிழில் ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News