ஜார்ஜியாவில் மழை: விஜய் 65 படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல்.!

ஜார்ஜியாவில் தினமும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், படத்தின் காட்சிகளை எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.;

Update: 2021-04-13 11:55 GMT

விஜய் நடித்து வரும் 'விஜய் 65' என்ற படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டப்படி ஜார்ஜியா நாட்டில் நடத்துவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கின்ற படம் விஜய் 65. இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ம் தேதி தமிழக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த தேர்தலில் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். அன்றை தினமே ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். இந்த படம் குறித்து அப்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.




 


இந்நிலையில், ஜார்ஜியாவில் தினமும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், படத்தின் காட்சிகளை எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

தினரும் ஒரு காட்சி மட்டுமே படக்குழுவினர் எடுத்து வருகின்றனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டோர் ஆலோசித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Similar News