நடிகர் 'விக்ரம் 60' படத்தில் இணையும் பாபி சிம்ஹா.!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் துருவ், விக்ரம் நடிக்கும் ‘விக்ரம் 60’ படத்தில் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2021-03-12 05:44 GMT

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் துருவ், விக்ரம் நடிக்கும் 'விக்ரம் 60' படத்தில் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




 


நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கின்ற படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.




 


இந்நிலையில், இந்த படம் திரில்லர் காட்சிகளை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நடிகர் பாபி சிம்ஹா மற்றும் நடிகைகள் சிம்ரன், வாணி போஜன் நடிக்க இருக்கின்றனர். பாபி சிம்ஹா ஏற்கெனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பிட்சா' ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜிகர்தண்டா படத்திற்கு தேசய விருதும் வாங்கியுள்ளார்.

தற்போது விக்ரம் 60 திரைப்படத்தில் பாமி சிம்ஹா இணைகிறார் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News