நடிகர் விக்ரம் வீட்டில் குண்டு வெடிக்கும்.. கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த மர்ம நபர்.!
நடிகர் விக்ரம் வீட்டில் குண்டு வெடிக்கும்.. கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த மர்ம நபர்.!
நடிகர் விக்ரம் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ள நடிகர் விக்ரம் வீட்டில் குண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்றும் மர்ம நபர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சினிமா பிரபலங்கள் வீட்டிற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.