நடிகர் விவேக் மறைவு: துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் இரங்கல்.!

விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

Update: 2021-04-17 11:29 GMT

நடிகர் விவேக்கின் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலை 11 மணியளவில் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிகாலை 4.35 மணியளவில் உயிர் பிரிந்தது.

அவரது மறைவு சினிமாத்துறையினரை மட்டுமின்றி லட்சக்கணக்கான ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.




 


இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு "நடிகர் விவேக்கின் மரணம் வருத்தம் அளிக்கிறது. டைமிங் காமெடி, துள்ளலான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர்" என்று இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


 



அதே போன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: "நடிகர் விவேக் மறைவு பற்றி அறிந்து வேதனையடைந்தேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தனது திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். எப்போதும் மக்கள் மனதில் இருப்பார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம்சாந்தி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News