நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் இல்லை: மத்திய ஆய்வுக் குழு தகவல் !

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இறந்தாக கூறப்படும் தகவல் உண்மை இல்லை என்று தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு தகவல் கூறியுள்ளது.;

Update: 2021-10-22 09:51 GMT
நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் இல்லை: மத்திய ஆய்வுக் குழு தகவல் !

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இறந்தாக கூறப்படும் தகவல் உண்மை இல்லை என்று தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு தகவல் கூறியுள்ளது. நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாள் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் விவேக் ஏப்ரல் 17ம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது நடிகர் விவேக் உயிரிழந்ததற்கு தடுப்பூசி செலுத்தியதுதான் என்று பலர் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே ஒருவிதமான அச்ச உணர்வை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன், விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார். இந்தப் புகார் மனுவைத் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்நிலையில், நடிகர் விவேக் உயிரிழந்தது அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது காரணம் இல்லை என்று தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு கூறியுள்ளது. விவேக் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: ETV Bharath

Image Courtesy:The Hindu


Tags:    

Similar News