கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்தவர்: நடிகர் விவேக் மறைவுக்கு சத்குரு இரங்கல்.!
நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
காமெடி நடிகர் விவேக் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4.35 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள மேட்டுகுப்பம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் இன்று மாலை போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், விவேக் தனது சினிமாத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்து, கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்தவர். தமிழகத்தில் மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தை துவக்கியதற்கும் என்றும் நம் நினைவில் இருப்பார். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.