சின்னத்திரை நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி.!
சின்னத்திரை நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி.!
சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் தொலைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் சென்னை நசரத்பேட்டை உள்ள தனியார் விடுதியில் தனது காதல் கணவர் ஹேமந்துடன் தங்கியிருந்தார்.
படப்பிடிப்பு முடிந்த பின்னர் இரவு 2.30 மணி அளவில் வந்த சித்ரா அதிகாலை 5 மணியளவில் தூக்கில் பிணமாக மீட்டதாக நசரத்பேட்டை போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 19ம் தேதி ஹேமந்த் ரவி, சித்ரா இருவரும் பெற்றோர் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே இருவர் உறவினர்கள் முன்னிலையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
பதிவு திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் அவர் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை நிறைவடைந்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், சித்ராவின் உடல் இறுதி சடங்கிற்காக சென்னை கோட்டூர்புரம் கொண்டு வரப்பட்டது. கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.