மீண்டும் வங்கி கடன் கேட்கும் நடிகர் சங்கம் - காரணம் என்ன?
சினிமா வட்டாரத்தில் ஏழாம்பொருத்தமாக இருப்பது தெனிந்திய நடிகர் சங்கமும், வங்கி கடனும்தான். சிவாஜி தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு வங்கியில் கடன் பெறப்பட்டது.
சினிமா வட்டாரத்தில் ஏழாம்பொருத்தமாக இருப்பது தெனிந்திய நடிகர் சங்கமும், வங்கி கடனும்தான். சிவாஜி தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு வங்கியில் கடன் பெறப்பட்டது. இந்த கடனை நீண்ட காலம் கடந்தும் திருப்பி செலுத்தாத நிலை நீடித்தது. பிறகு விஜயகாந்த் தலைவராக பொறுப்பேற்றார். இவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்கத்திற்காக பெறப்பட்ட வங்கி கடனை திருப்பி செலுத்தினார்.
பின்னர் நாசர் தலைவராக பொறுப்பேற்று வங்கி கடன் பெறாமலேயே புதிய கட்டிடம் நடிகர் சங்கத்திற்கு கட்டப்படும் என்று தெரிவித்தார். இது சிறப்பான வரவேற்ப்பாக அமைத்தாலும் அதன் பின்பு நடந்த நிர்வாக மாற்றம், ஆட்சி மாற்றம், வழக்குகள் மற்றும் ஏற்பட்ட உள் குழப்பங்கள் போன்ற காரணத்தினால் 70 சதவிகித பணிகளோடு கட்டிட பணி நின்றது.
தற்போது மீண்டும் நடிகர் சங்க தலைவராக நாசர் பொறுப்பேற்று உள்ளார். இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டிட பணிகளை தொடர நிதி வசதி இல்லாததால் நடிகர் சங்கம் சார்பாக வங்கியில் கடன் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
சங்க தலைவரான நாசர் மற்றும் துணை தலைவரான பூச்சி முருகன் ஆகிய இருவரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 30 கோடி கடன்பெற ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். கடன் வசதி பெற்றவுடன் நடிகர் சங்க கட்டிடத்தை 6 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.