தான் நடித்த படத்தை பார்க்காமலேயே இறந்த நடிகை சித்ரா.. படக்குழுவினர் வேதனை.!

தான் நடித்த படத்தை பார்க்காமலேயே இறந்த நடிகை சித்ரா.. படக்குழுவினர் வேதனை.!;

Update: 2020-12-14 10:51 GMT

முதன் முதலாக சின்னத்திரை மூலமாக திரையில் தோன்றியவர் விஜே சித்ரா, இவர் கால்ஸ் என்ற படம் திரைக்கு வருவதற்கு முன்பே சித்ரா இறந்து போனதால் படக்குழுவினர் வேதனை அடைந்துள்ளனர்.

சின்னத்திரை மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை சித்ரா. இவர் நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். இவரது நடிப்பு சிறு குழுந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் இறப்பில் உள்ள மர்மம் இன்னும் தீரவில்லை. சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், கணவர் ஹேம்நாத்திடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தமிழ் சினிமாவில் கால்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாகவே நடித்தார். கடந்த ஜூலை மாதத்தில் படத்தை திரையிட கால்ஸ் படத்தின் இயக்குநர் சபரீஷ் திட்டமிட்டிருந்தார். தனக்குரிய அனைத்து காட்சிகளிலும் சித்ரா நடித்தும் கொடுத்துள்ளார். ஆனால் கொரோனா தொற்று காரணமாகவும், தொழில்நுட்ப பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால் 6 மாதங்கள் கழித்து கால்ஸ் படம் வெளியாகவுள்ளது. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் டிசம்பர் 13ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

த்ரில்லர் மூவியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் 1ம் தேதி கால்ஸ் படத்தின் டிரைலர் வெளிவருகிறது. இந்த படத்தில் சித்ராவுடன் இணைந்து சவுந்தரராஜன், டெல்லி கணேஷ், நிழகல்கள் ரவி, வினோதினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தான் முதலும் கடைசியாக நடித்த திரைப்படத்தை திரையில் பார்க்காமலேயே சித்ரா உயிரிழந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Similar News