ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

Update: 2021-05-07 10:17 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

இது போன்ற நேரத்தில் அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அது போன்றவர்கள் உணவுக்கு மிகவும் கஷ்டப்படும் நிலையே பல இடங்களில் உருவாகியுள்ளது.


 



இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது அறக்கட்டளையின் மூலம் உதவி செய்து வருகிறார். தனது அறக்கட்டளையின் மூலம் மும்பையில் உள்ள பலருக்கு உணவு வழங்கி வருகிறார்.

இது பற்றி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியிருப்பதாவது: "பசித்தவர்களுக்கு உணவு வழங்குவதன் மூலம் அமைதி தொடங்குகிறது என்று அன்னை தெரசா கூறியுள்ளார். இந்த கடினமான நேரங்களில் ஏழை மக்களுக்கு உதவி செய்வதை நான் கவுரமாக கருதுகிறேன்" என கூறியுள்ளார்.

Similar News