அருமையான படம் என்று சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நடிகை ராதிகா..!
அருமையான படம் என்று சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நடிகை ராதிகா..!;
நடிகை ராதிகா அவரது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் வெளியான ஒரு திரைப்படத்தை பார்த்து அருமையான திரைப்படம் என்று பதிவிட்டிருக்கிறார்.அந்தவகையில் கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியான மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம் 2' படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் த்ரில், சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டதாக இருக்குமென்றும் குறிப்பாக கடைசி 40 நிமிடங்கள் வேற லெவலில் இருப்பதாக படம் பார்த்தவர்கள் படத்தைப் பற்றிய கருத்து தெரிவித்து வருகின்றனர்.
த்ரிஷ்யம்-2 என்ற படத்தின் முதல் பாகத்தை கிடைத்த வெற்றி போல இரண்டாம் பாகத்துக்கும், அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பாசிட்டிவ் கருத்துக்களே பெற்றுவருகின்றனர்.மேலும் இப்படமும் பழமொழிகளில் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது ராதிகாவும் இந்த படத்தை பார்த்து, புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் சூப்பர் திரைப்படம் என்றும், மோகன்லால் நம்முடைய இதயத்தை கவர்ந்து விட்டார் என்றும், இப்படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர், என்ன ஒரு அற்புதமான 2-ம் பாகம் திரைப்படம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.