நடிகை சாய் பல்லவியின் சகோதரி புதிய படத்தில் அறிமுகம்.!
நடிகர் சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன், ஸ்டன்ட் சில்வா இயக்கும் படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர் அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், இந்தப்படத்தில் சமுத்திரகனியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்ற தகவல்கள் உலா வருகின்றது.;
நடிகர் சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன், ஸ்டன்ட் சில்வா இயக்கும் படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர் அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், இந்தப்படத்தில் சமுத்திரகனியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்ற தகவல்கள் உலா வருகின்றது.
தன்னுடைய அக்கா சாய் பல்லவியை போன்று பூஜாவும் நடிகையாவார் என்று பேசப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2017ம் ஆண்டு வெளியான காரா என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.
சாய் பல்லவிக்கு போன்று பூஜாவுக்கும் இணையத்தில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனிடையே முதன் முதலாக தமிழில் பூஜா விரைவில் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.