கணவர் நாக சைதன்யாவை பிரிந்தார் சமந்தா: இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
கணவர் நாக சைதன்யாவை அதிகாரப்பூர்வமாக பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் நாக சைதன்யாவை அதிகாரப்பூர்வமாக பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை நடிகை சமந்தா திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர்கள் திருமணத்திற்கு பின்னர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதனிடையே சமீபகாலமாக இல்லற வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுவதாகவும் நடிகை சமந்தா எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து பற்றி வெளியிடுவார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், நாக சைதன்யாவை விட்டு தான் பிரிவதை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீண்ட ஆலோசனைக்கு பின்னரே நானும் சைதன்யாவும் அவரவர் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். எனவே கணவன்- மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து விட்டோம். ஒரு தசாப்தத்திற்கும் மேலான நட்பைப் பெறுவது எங்கள் அதிர்ஷ்டம். இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ஆதரவளிக்க ரசிகர்களையும், ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இவரது செய்தியை பார்த்து இருவரின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: samantharuthprabhuoff