நடிகர் பரத்துடன் இணையும் வாணி போஜன்.!
‘முன்னறிவான்’, யாக்கைத் திரி, உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பரத், தற்போது புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.;
'முன்னறிவான்', யாக்கைத் திரி, உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பரத், தற்போது புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தை அறிமுக இயக்குநர் இயக்கிறார். இதனை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில், பரத் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த 'காளிதாஸ்' படத்தை போன்று திரில்லர் வகையிலான படமாக உருவாக உள்ளது. இந்தப்படத்தில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும, இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த மாதம் (ஏப்ரல்) சென்னையில் தொடங்க உள்ளது. விரைவில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. நடிகை வாணி போஜன் சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.