அடேங்கப்பா... தமிழ் படத்தில் நடிக்க தீபிகா படுகோனே கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சிம்பு நடிக்கும் புதிய படத்தில் தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் ஆனால் அதற்கு அவர் 30 கோடி சம்பளம் கேட்டதாகவும் கூடுதலாக சில நிபந்தனைகளை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

Update: 2023-05-21 11:45 GMT

கமலஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவை அணுகினர். ஆனால் அவர் தனக்கு 30 கோடி சம்பளம் கேட்டு  சில நிபந்தனைகளையும் விதித்ததாக கூறப்படுகிறது.


அதாவது 'படப்பிடிப்பில் பங்கேற்கும் நாட்களில் சொகுசு ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் . அது மட்டும் இன்றி தான் தங்கி இருக்கும் ஓட்டல் தளத்தில் உள்ள அனைத்து அறைகளையும் முன்பதிவு செய்து தனக்கே ஒதுக்க வேண்டும்' என்று கூறினாராம். இதை தவிர்த்து பயண செலவுகள் தனது ஊழியர்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்கவும் கேட்டாராம். இது பட குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் இதனால் அவருக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தீபிகா படுகோனே ஏற்கனவே ரஜினிகாந்தின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் போலோ சங்கர், தமிழில் ரிவால்வர் ரீட்டா, ரகுதாதா, ஜெயம் ரவியின் சைரன் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் போன்ற படங்கள் உள்ளன.

Similar News