அஜித்தின் 63 - வது படம்

அஜித்தின் 63 வது படம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2023-04-19 11:00 GMT

துணிவு படத்துக்கு பிறகு அஜித்குமார் நடிக்கும் 62-வது  படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். பட வேலைகளை தொடங்கவும் தயாராகி வந்தனர். ஆனால் அந்த படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவன குழுவுக்கு விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனால் அவரை நீக்கிவிட்டு அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க மகிழ்திருமேனியை தேர்வு செய்துள்ளனர்.


இவர் ஏற்கனவே தடையறத் தாக்க, மீகாமன், தடம் ,கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை டைரக்ட் செய்துள்ளார் .இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. ஆனாலும் அஜித் படப்பிடிப்பு தொடங்கவில்லை . கதையை இன்னும் மெருகேற்ற சொல்லி இருப்பதால் படப்பிடிப்புக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.


62 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தற்போது அஜித் நடிக்க உள்ள 63 வது படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் ,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மகிழ் திருமேனி படத்தை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜித் நடிப்பார் என்று தெரிகிறது.






Similar News