மீண்டும் AK61 படப்பிடிப்பு - ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள அஜித்
தனது 61வது படத்திற்காக அஜித்குமார் மீண்டும் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார்.
தனது 61வது படத்திற்காக அஜித்குமார் மீண்டும் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார்.
இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் தற்பொழுது 61'வது படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார், தற்பொழுது படப்பிடிப்பு இடைவேளையில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த அவர் தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்ற அவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். அவரை பார்த்ததும் அங்குள்ள ஊழியர்கள் சூழ்ந்து கொண்டு போட்டோக்களை எடுத்துள்ளனர், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக உலா வருகிறது.