10வது திருமணநாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய நடிகர் அல்லு அர்ஜூன்.!

Allu Arjun Celebrates 10thWedding day At TajMahal;

Update: 2021-03-06 13:45 GMT

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனது திருமணநாளை முன்னிட்டு தாஜ்மஹாலில் மனைவியுடன் கொண்டாடியுள்ளார். அவர் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜூன். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஸ்னேகா ரெட்டியை இதே தினத்தில் திருமணம் செய்து கொண்டார்.




 


இவர்கள் எதிர்பாராமல் ஒரு திருமணத்தில் இருவரும் சந்தித்து கொண்டுள்ளனர். அப்போதுதான் காதல் மலர்ந்துள்ளது. இந்த ஜோடிக்கு அல்லு அயன், அல்லு அர்ஹா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அல்லு அர்ஜூன் தம்பதிக்கு திருமணம் முடிந்து 10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். இதனை கொண்டாடும் விதமாக அந்த அல்லு அர்ஜுன் மனைவி ஸ்னேகா ரெட்டியுடன் தாஜ்மஹாலுக்குச் சென்று கொண்டாடியுள்ளார். அப்போது இரண்டு பேரும் வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Similar News