விஜய் சேதுபதியின் ஒரு மணி நேர படமா? அவரே வெளியிட்ட தகவல்!

விஜய் சேதுபதியின் ஒரு மணி நேர படமா? அவரே வெளியிட்ட தகவல்!;

Update: 2020-12-31 17:37 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரை மக்கள் அனைவரும் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கிறார்கள். அந்த வகையில் தற்போது விஜய்சேதுபதி, தனது நிறுவனம் தயாரிக்க இருக்கும் வெப் திரைப்படம் குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் வகையில் தயாரிக்கப்படும் இந்த வெப் திரைப்படத்தின் டைட்டில் 'முகிழ்' என்று அவரது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் அதாவது நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். இந்தப் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா முக்கிய வேடத்திலும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ரெஜினாவும் நடிக்க உள்ளார்கள் என்பதும் இந்த படத்தை கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் இசையமைப்பாளர் ரீவா இசையில், சத்யா ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் திரைப்படம் விரைவில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஒரே ஒரு மணி நேரம் ஓடும் வெப் திரைப்படம் ஒரு புதிய முயற்சியாகவே கருதப்படுகிறது.  இதுபற்றிய முழுமையான விவரங்களை இனி வரும் நாட்களில் காண்போம்.

Similar News