கேன்ஸ் விழாவில் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த டெல்லி காற்று மாசு குறித்த ஆவணப்படம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்று சர்வதேச கவனத்தை ஈர்த்து விருது வென்றுள்ளது.

Update: 2022-05-31 02:00 GMT

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்று சர்வதேச கவனத்தை ஈர்த்து விருது வென்றுள்ளது.




பிரான்ஸ் நாட்டில் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடந்து முடிந்தது, இதில் உலகின் பல நாடுகளிலிருந்தும் திரைப்பட கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்தும் ஏ.ஆர்.ரகுமான், மாதவன், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் பங்கேற்றனர். இதில் தமிழில் பார்த்திபனின் 'இரவின் நிழல்', மாதவனின் 'ராக்கெட்ரி' ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.




இந்த நிலையில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஷானக் சென் இயக்கிய 'ஆல் தட் ப்ரீத்தஸ்' என்ற ஆவணப்படம் விருது பெற்றது, அதற்கு கோல்டன் ஐ விருது வழங்கப்பட்டது. தலைநகர் டெல்லி மாசடைந்து வருவது குறித்தும் அந்த மாசுக்கு இடையில் மாட்டிக் கொண்ட ஒரு பருந்தையும் அதனை காப்பாற்ற போராடும் இரு சிறுவர்களையும் பற்றிய இந்த ஆவணப்படம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அது மட்டுமல்லாமல் விருதையும் பெற்றுள்ளது.

Similar News