ஆரியை டார்கெட் செய்யும் அனிதா மற்றும் பாலாஜி.!

ஆரியை டார்கெட் செய்யும் அனிதா மற்றும் பாலாஜி.!;

Update: 2020-12-04 17:15 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வாரங்களாக  நடைபெற்றுவந்த கால்சென்டர் டாஸ்க்  நன்றாக விளையாடியவர்கள் வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் எந்த ஒரு முடிவும் இல்லாமல் முடிவடைந்தது. தனக்கு இரண்டாவது இடம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அனிதா எந்த இடத்திலும் நிற்க முடியாது என்று கூறியதை அடுத்து பத்தாம் இடம் காலியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நேற்றைய எபிசோடின் போது பாலாஜி கூறியபோது சனம் ஷெட்டிக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் ஒரே ஒரு விஷயம், ஒரு கால் வந்தது என்பதற்காக இரண்டு கால் வந்தவர்கள் என்ன தப்பு செய்தார்கள் என்று ஆரியை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அப்போது அனிதா நான் வந்து தோல்வி அடைந்தவர் என்றே வைத்துக்கொள்வோம். சனம்ஷெட்டிக்கு நீங்கள் ஏன் ஆதரவு கொடுத்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு ஆரி சனம் சரியாகத்தான் விளையாடினார் என்பதால் ஆதரவு கொடுத்தேன் என்று கூறினார்.

மேலும் சரியான ஒரு நபருக்கு ஆதரவு கொடுக்கவில்லை எப்படி என்று கேட்க அதற்கு நீங்கள் கைதூக்கியது தவறு என்று அனிதா கூற, அதற்கு ஆரி அது உங்கள் பார்வை என்று கூறுகிறார்.இறுதியில் பாலாஜி ஒரு பக்கத்தில் உள்ள நியாயத்தை பேசிவிட்டு இன்னொரு பக்கத்தில் உள்ள நியாயத்தை பேசாமல் விட்டுவிட்டீர்களே என்று கூற அதற்கு பதில் சொல்ல ஆரி முடியாமல் திணறுகிறார்.

மொத்தத்தில் அனிதா மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் ஆரியை மாறி மாறி  கேள்வி கேட்கும் வகையில் ப்ரோமோ முடிந்தது.இன்றைய நிகழ்ச்சியில் இதற்கான தீர்வு எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்போம்.

Similar News