அனிதா பதிலடி: ஆரி ரசிகர்களால் தான் தகுதி இல்லாதவர்கள் வீட்டில் உள்ளனர்!
அனிதா பதிலடி: ஆரி ரசிகர்களால் தான் தகுதி இல்லாதவர்கள் வீட்டில் உள்ளனர்!;
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அனிதா. வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் குறிப்பாக தாய்மை குறித்து ஆரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சண்டை போட்ட சம்யுக்தா, ஆரியுடன் நேருக்கு நேர் மோதிய அர்ச்சனா, ஆரியிடம் கோபமாக பேசிய அனிதா ஆகிய மூவரும் அடுத்தடுத்து வெளியேறியதே இதற்கு சான்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனிதா குறித்து ஆரி ரசிகர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் ஆரி ரசிகர்கள் ஒன்றை நினைத்தால் அதை நிறைவேற்றி விடுவார்கள், உங்களை வெளியேற்றியதை போல என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவிற்கு அனிதா பதிலடி கொடுத்துள்ளார். எனவே ஆரிக்கு சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும் ஆரியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்ட போட்டியாளர்களை அவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆரியை எதிர்த்து பேசினால் வெளியே அனுப்புவோம் என்பது வாக்கு செலுத்துபவர்களுக்கு தான் அசிங்கம் என்றும் இது ஆரிக்கே பெருமை இல்லை என்றும், போட்டியில் நன்றாக விளையாடாதவர்களை தான் வெளியேற்ற வேண்டும் என்பதுதான் விதி என்றும் உங்களை போன்றவர்களால் தான் தகுதி இல்லாதவர்கள் இன்னும் வீட்டுக்குள் இருக்கின்றார்கள் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
அதேபோல் உங்களுடைய கருத்தை கேட்கும்போது எனக்கு பரிதாபமாக இருக்கிறது என்றும், ஆரி ரசிகர்களின் ஓட்டு எனக்கு வந்ததாக சொல்வதில் எனக்கு பெருமை இல்லை என்றும், எனக்கே எனக்காக ஓட்டுகள் வந்தால் தான் எனக்கு பெருமை என்றும், ஆரி ரசிகர்களின் ஆதரவுடன் இறுதிப்போட்டிக்கு செல்வதைவிட அவரது குற்றங்களை சொல்லிக்காட்டி எனக்கு வாக்களித்தவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதைத்தான் பெருமையாக நான் நினைக்கிறேன் என்றும் அனிதா சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.ஆனால் இதற்கு ஆரி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.