அஞ்சலியின் 50 வது படம் 'ஈகை' - அட இத்தனை சுவாரஸ்யம் நிறைந்த கதையா?

கிரீன் அம்யூஸ்மென்ட் மற்றும் 3d புரொடக்ஷன்ஸ் சார்பில் தங்கராஜ் லட்சுமி நாராயணன், ஜெ. தினகரன் ஆகியோர் தயாரிக்க அறிமுக இயக்குனர் அசோக் வேலாயுதம் டைரக்ட் செய்யும் புதிய படம் 'ஈகை'.

Update: 2023-06-26 06:15 GMT

அஞ்சலியின் ஐம்பதாவது படமாக 'ஈகை' படபிடிப்பு தொடங்கியது. இயக்குனர் பாரதிராஜா, புஷ்பா சுனில், இளவரசு, புகழ், அறிமுக நடிகர்கள் ஹரி, அபி நட்சத்திரா, நிஷாந்த் ரகு, கிருஷ்ண சந்தர், காஷ்யப் பார்பயா நடிக்கிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அஞ்சலி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் அஞ்சலியின் ஐம்பதாவது படமாகும்.

இந்த படத்தின் படப்பிடிப்பது தொடக்க விழா சென்னையில் தொடங்கியது. இதில் இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி உள்ளிட்டர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஈகை படத்தின்  இயக்குனர் அசோக் வேலாயுதம் கூறியதாவது:-

சஸ்பென்ஸ் நிறைந்த சமூக கருத்துள்ள படமாக ஈகை உருவாகிறது.  இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும் மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் இந்தப் படம். தமிழ்,  தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத், மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படத்திற்கு தரன்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஸ்ரீதர், எடிட்டர் பிரவீன்.கே.எல் கலை,  த.இராமலிங்கம், நடனம் ஸ்ரீதர், பாடல்கள் விவேகா, அறிவு , சண்டை கணேஷ் இப்படி தரமான திரை கலைஞர்களால் 'ஈகை' படம் எடுக்கப்பட இருக்கிறது என இயக்குனர் அசோக் வேலாயுதம் தெரிவித்தார்.

Similar News