அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தது.. விரைவில் சென்னை திரும்பும் ரஜினிகாந்த்.!

‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இந்த வாரத்திற்குள் சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2021-05-05 04:28 GMT

'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இந்த வாரத்திற்குள் சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு மத்தியிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.


 



வருகின்ற மே 10ம் தேதிக்குள் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது. இந்த நேரத்திற்குள் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விடும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். படம் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

Similar News