'பதான்' படத்தின் மீது மேலும் ஒரு வழக்கு

2018 பாலிவுடில் ஷாருக்கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் நடித்த 'பதான்'

Update: 2023-01-19 14:14 GMT

2018 பாலிவுடில் ஷாருக்கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாகவும் ஜான் ஆபிரகாம் வில்லனாகவும் நடித்துள்ளர்.

இந்நிலையில் தற்போது டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சிலர் இணைந்து 'பதான்' படத்தின் மீது கோரிக்கை ஒன்றை மனுவாக தாக்கல் செய்திருந்தனர். அதில் இந்த படத்தை ஓடிடி வெளியிடவும், பார்வையற்ற மற்றும் செவித்திறன் எழுந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த படத்தை பார்த்து ரசிக்கும் படியாக சப்டைடில்கள் மற்றும் ஆடியோ விவரங்கள் ஆகியவற்ற இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸிக்கு அந்த மனுவை குறிப்பிட்டு இருந்த இந்த விஷயங்களை மேற்கொண்டு ஓ.டி.டி தளத்தில் படத்தை வெளியிடுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் நீதிமன்றம் பிப்ரவரி 20-க்குள் இந்த மாற்றங்களை செய்து சென்சாருக்கு மீண்டும் அனுப்பும்படியும் மார்ச் 20 க்குள் சென்சார் சான்றிதழ் வழங்கும் படியும் குறிப்பிட்டுள்ளது.

Similar News