சுதந்திர போராட்ட கதைக்களத்தில் இறங்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கும் '1947 ஆகஸ்ட் 16' என புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-26 12:42 GMT

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கும் '1947 ஆகஸ்ட் 16' என புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.





தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் முருகதாஸ் ஒரு நீண்ட நாட்களாக படம் இயக்காமல் இருந்த நிலையில் தற்போது ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். முருகதாஸ் அவர்களிடம் நீண்ட நாளாக இணை இயக்குனராக பணிபுரிந்த என்.எஸ்.பொன்குமார் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.




 


கௌதம் கார்த்திக் நடிக்க சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் துணிச்சலான வீரனைப் பற்றிய கதை. இது குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில் '1947 ஆகஸ்ட் 16' ஒரு நேர்மையான கண்ணியமான யோசித்து பார்க்கும் அற்புதமான படைப்பு. இதனை உருவாக்கிய வேண்டிய கட்டாயத்தை கதையை ஏற்படுத்தியுள்ளது இந்த படத்தில் இருந்து பார்த்தால் நமது மனதில் நிலைத்து நிற்கும்' என்றார்.

Similar News