பிக்பாஸில் பாலாஜி, ஆரியை பழி வாங்க திட்டம் போடும் அர்ச்சனா குழுவினர்..!
பிக்பாஸில் பாலாஜி, ஆரியை பழி வாங்க திட்டம் போடும் அர்ச்சனா குழுவினர்..!;
பிக்பாஸில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் பாலாஜி அணி மனிதர்கள் அணியாகவும், அர்ச்சனா அணி ரோபோ அணியாகவும் விளையாடினார்கள். இதில் அர்ச்சனாவின் தந்தை குறித்த கேள்வியை நிஷா கேட்டு பொறுமையை சோதிக்க வைத்ததால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் அன்பு குரூப்பே உடைந்து விடுமோ என்ற நிலையும் இருந்தது.
இந்த நிலையில் இன்று வந்த முதல் ப்ரோமோவில் அர்ச்சனா அணியினர் மனிதர்கள் அணியாகவும், பாலாஜி அணியினர் ரோபோ அணியாகவும் விளையாட உள்ளனர். நேற்று டாஸ்க் என்றப் பெயரில் கொடுமைப் படுத்திய பாலாஜி அணியினர்களை பழிவாங்க அர்ச்சனா அணிக்கு இன்று ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் இன்றைய டாஸ்க் தொடங்கும் முன்னரே பாலாஜி ஆரி, ரியோ ஆகியோர் சுதாரித்து முன்கூட்டியே சில கண்டிஷன்கள் போடுவதை அர்ச்சனா அணியினர் ஏற்று கொள்ள மறுப்பதால் நடைபெறும் வாக்குவாதத்துடன் இன்றைய முதல் புரோமோ முடிவடைகிறது.
மேலும் இன்றைய டாஸ்க்கை பாலாஜி சீரியஸாக எடுத்து கொண்டது போலவே தெரியவில்லை. இது பற்றிய முழுமையான விவரம் இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும் என்று பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.