ஹிருத்திக் ரோஷன், பிரபாஸ் இணைகிறார்களா?

நடிகர் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ், சலார், ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களில் நடித்த வருகிறார்.

Update: 2023-01-26 12:22 GMT

நடிகர் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ், சலார், ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களில் நடித்த வருகிறார். ஹிந்தியில் இந்த படங்களுக்கு அடுத்து பதான் என்ற படத்தில் ஷாருக்கான் வைத்து இயக்கிய சித்தார்த் ஆனந்தின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கப் போகிறார்.

மேலும் இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராக உள்ளது அதில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஹிந்தியில் பைட்டர் என்ற படத்தை ஹிருத்திக் ரோஷனை நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார்.

இப்படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், பைட்டர் படத்தின் படபிடிப்பு முடிந்ததும் ரித்திக் ரோஷன் பிரபாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

Similar News