#BigBoss4 #Promo கமல் கேட்ட கேள்விக்கு  தவறாக பதிலளித்த ஆரி - சந்தோஷத்தில் ரம்யா!

#BigBoss4 #Promo கமல் கேட்ட கேள்விக்கு  தவறாக பதிலளித்த ஆரி - சந்தோஷத்தில் ரம்யா!

Update: 2021-01-03 18:10 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சி காரசாரமாக முடிவடைந்தது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய 10 நாட்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வந்த ப்ரோமோவில் போட்டியாளர்கள் தங்களுக்கு கிடைத்த புகைப்படங்களின் அடிப்படையில் ஒவ்வொருவரும்  அந்த புகைப்படத்தில் உள்ள போட்டியாளரின் ஸ்டாட்டர்ஜி குறித்து கருத்தை கமல்ஹாசன் கேட்கிறார்.

அப்போது சோம்சேகருக்கு ஆஜித் புகைப்படம் வந்த நிலையில் ஆஜித்துக்கு கேம் பிளான் இருக்கின்றதா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறுகிறார். ஆரிக்கு ரம்யாவின் புகைப்படம் வந்த நிலையில் அவர் ரம்யாவின் ஸ்டாட்டர்ஜி பற்றி கூறாமல் வழக்கம்போல் என்றோ நடந்த ஒரு டாஸ்க் குறித்து கூற அப்போது இடைமறித்த கமல்ஹாசன் ஸ்டாட்டர்ஜி தாண்டி வேறு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று குறிப்பிடுகிறார். கமல் ஆரியிடம் இப்படி ஒரு கருத்தை கூறியவுடன் ரம்யா சந்தோஷத்தின் உச்சியில் சிரித்தார்.

மேலும் ஆரி மீது போட்டியாளர்கள் அனைவரும் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு என்னவென்றால் ஒரு விஷயத்தை பேசிக்கொண்டிருக்கும்போது சம்பந்தமே இல்லாமல் இன்னொரு போட்டியாளரை இழுத்து, தேவையில்லாத ஒரு சம்பவத்தையும் இழுத்து அவர்களுடைய குறைகளை எடுத்துக் காண்பிக்கிறது என்று கூறிவருகின்றனர். இந்த நிலையில் ரம்யாவுக்கு ரியோ புகைப்படம் வந்த நிலையில் ஒரு பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மேலோட்டமாக வேறொரு விஷயத்தை அவர் கையாள்வது போல் தெரிகிறது என்று கூறுகிறார். எனவே கடைசியாக பாலாஜிக்கு ஆரியின் புகைப்படம் வருவதும், ஆரி குறித்து பாலாஜி சொல்ல ஆரம்பிக்கும் காட்சியுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வருகிறது. இதில் ஆரி குறித்து பாலாஜி  கூறுகிறார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.

Similar News