ரம்யாவின் வாயை அடைத்த ஆரி: கடுப்பில் ரம்யா!

ரம்யாவின் வாயை அடைத்த ஆரி: கடுப்பில் ரம்யா!;

Update: 2021-01-08 16:56 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று 96-வது நாட்கள் நடந்து கொண்டிருக்கும் வகையில்  பலவிதமான பிரச்சினைகளை போட்டியாளர்கள் சந்தித்துக் கொண்டுதான் வருகின்றன. அந்த வகையில் இதுவரை சூப்பராக விளையாடி வரும் ஆரிக்கு ஈடு இணை கொடுக்க முடியாத போட்டியாளர்கள் அவரை ஒட்டுமொத்தமாக சேர்ந்து எதிர்க்கும் பாணியை கடைபிடித்து வருகின்றனர். இருந்தாலும் எத்தனை பேர் தனக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அனைத்தையும் சூப்பராக சமாளித்து விளையாடி வருகிறார் ஆரி என்பதும் அதனால் தான் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் வரும் வாக்கியத்தின் அடிப்படையில் அந்த வாக்கியம் யாருக்கு சரியாக பொருந்தும் என்று கூறும் டாஸ்க் இன்றும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் ஆரி தனக்கு வந்த வாக்கியம் குறித்து கூறுகையில் ரம்யா நேற்று ஒரு விஷயம் கூறினார்கள். நான் சேஃப் கேம் விளையாடுகிறேன் என்று கூறினார்கள் என்று கூறிய போது குறுக்கிட்ட ரம்யா சேஃப் கேம் என்று நான் சொல்லவில்லை, ஒன்சைடு என்றுதான் கூறினேன் என்று கூற அதற்கு பதிலளித்த ஆரி, ஒன் சைடு மற்றும் சேஃப் கேம் ஆகிய இரண்டையும் நேற்று சொன்னீர்கள் என்று கூற அப்போது மீண்டும் குறுக்கிட்ட ரம்யா நேற்றும் நான் சொன்னது ஒன்சைடு தான் சேஃப் கேம் என்று சொல்லவில்லை என்று கூறினார்.

அப்போது ஆரி நான் பேசி முடிக்கும் வரை நீங்கள் பேச வேண்டாம் என்று நினைக்கின்றேன். அதுதான் விதியிலும் உள்ளது. தயவு செய்து அதை ஃபாலோ பண்ணுங்கள். என்னைப்பற்றி மற்ற போட்டியாளர்கள் சொல்லும்போது நான் பதில் பேசவில்லை. இதுதான் உங்களுடைய பிரச்சனை. உங்களது குறையை சுட்டிக் காட்டும் போது நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தாலே போதும் என்று ஆரி கூற, அதன்பிறகு ரம்யா வாயடைத்துப் போய் அமைதியாக உட்கார்ந்திருந்தார். கடந்த சில நாட்களாகவே பாலாஜி மட்டுமின்றி ரம்யாவும் ஆரியுடன் மோதலை அதிகமாக கடைபிடித்து வருகிறார் என்பதும் அதனால் பார்வையாளர்கள் மத்தியில் மிக மோசமான பதிவுக்கு ஆளாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar News