ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க முடியாது! கறார் காட்டிய நீதிமன்றம்!
போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து கோவாவுக்கு சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது. அந்த கப்பலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் உடன் சென்றிருந்தனர். அப்போது போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தது. அவர்களிடம் போதை மருந்துகளும் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஆர்யன்கான் சார்பில் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் ஜாமின் கோரி ஆர்யன்கான் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான இரண்டு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். இந்த தீர்ப்பு இன்று (அக்டோபர் 20) அளிக்கப்பட்டது. அதில் ஆர்யன்கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் உட்பட 3 பேருக்கு ஜாமின் வழங்க மறுத்து அவர்களின் ஜாமின் மனுவை நிராகரித்தது. இதனால் தனது மகனுக்கு ஜாமின் கிடைக்காமல் ஷாருக்கான் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar