விடுமுறை துவங்கியதால் வசூலை குவிக்கத்துவங்கிய அவதார்
ஒன்பது நாட்களில் இந்தியாவில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக 'அவதார்' திரைப்படம் வசூல் குறித்து படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒன்பது நாட்களில் இந்தியாவில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக 'அவதார்' திரைப்படம் வசூல் குறித்து படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகிய 'அவதார் தி வே ஆப் வாட்டர்' திரைப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியானது. முதல் வார இறுதியில் சுமார் 40 கோடி ரூபாய் வசூலை கடந்த இந்த படம் தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பம் ஆகிவிட்டதால் இரண்டு நாட்களாக படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாகிவிட்டது.
தற்போது இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள இந்த படம் விடுமுறை முடியும் பொழுது 300 கோடி வசூலை தாண்டும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 650 மில்லியன் யு எஸ் டாலர் வசூலை அவதார் இரண்டாம் பாகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.