அடேங்கப்பா! இவரின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா? தென்னிந்திய நடிகர்களில் முதலிடம்
தென்னிந்திய நடிகர்களில் அதிக சொத்து மதிப்பு உள்ள நடிகர்களின் பட்டியலில் முதலிடம் நாகார்ஜுனாவுக்கு கிடைத்துள்ளது.
அதிக சொத்து சேர்த்து உள்ள தென்னிந்திய நடிகர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தென்னிந்திய நடிகரான நாகர்ஜுனா முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு 3000 கோடி சொத்துக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாகார்ஜூனா ஒரு படத்துக்கு 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க 2 கோடி பெறுகிறார். 100 கோடி சம்பளம் வரும் நடிகர்கள் மத்தியில் இவருக்கு எப்படி மூன்று ஆயிரம் கோடி சொத்து என்ற கேள்வி எழலாம்.
நாகார்ஜுனாவுக்கு சினிமாவை தாண்டி தொழில்கள் மூலம் அதிக வருமானம் வருகிறதாம். இவருக்கு ஹைதராபாத்தில் சொந்தமாக அன்னபூர்ணா சினிமா ஸ்டுடியோ உள்ளது . இங்கு படபிடிப்புகள் நடத்த கோடி கோடியாய் கட்டணம் வாங்குகிறார். இது தவிர பள்ளிகள் கன்வென்ஷன் சென்டர் என்று நிறைய தொழில்கள் உள்ளன. இதன் மூலம் வெற்றிகரமான தொழில் அதிபராக வலம் வருகிறார்.
இவருக்கு அடுத்தபடியாக ரூபாய் 2200 கோடி சொத்துகளுடன் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இரண்டாவது இடத்திலும், சிரஞ்சீவி 1650 கோடி சொத்துடன் மூன்றாம் இடத்திலும், அவரது மகன் ராம்சரன் 1370 கோடி சொத்துடன் நானன்காம் இடத்தில் ஜூனியர் என்டிஆர் 450 கோடி சொத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்த இடங்களில் தமிழ் மலையாள நடிகர்கள் இருக்கிறார்கள்.
SOURCE :DAILY THANTHI