அதர்வா, யோகி பாபு , கிங்க்ஸ்லீ ஆகியோருக்கு தடையா? திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கூறிய தகவல் என்ன?

பட அதிபர் சங்கம் அதர்வா,யோகி பாபு, கிங்ஸ்லீ ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2023-06-20 06:30 GMT

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பட அதிபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளில் தொடர்ந்து பிரச்சினைகள் செய்து வரும் ஐந்து நடிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நடிகர்களின் பெயர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருப்பத பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .


இந்த ஐந்து நடிகர்களுக்கும் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நடவடிக்கைக்கு உள்ளாகும் நடிகர்கள் பட்டியலில் அதர்வா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஜெயபிரகாஷ் மற்றும் முன்னணி நடிகர் ஒருவர் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.


பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி 'லெக் பீஸ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பணமும் பெற்றுக் கொண்டு பிறகு படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுபோல் நடிகர் ஜெயப்பிரகாஷ் மீது தயாரிப்பாளர் ஞானவேல் புகார் அளித்திருக்கிறார். நடிகர் அதர்வா, யோகி பாபு ஆகியோர் மீதும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புகார்கள் வந்திருப்பதாக பட அதிபர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News