கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்: இதய பரிசோதனை செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை திடீர் உயர்வு !

கன்னட சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக கடந்த வாரம் உயிரிழந்தார். இதன் காரணமாக பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

Update: 2021-11-03 09:40 GMT

கன்னட சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக கடந்த வாரம் உயிரிழந்தார். இதன் காரணமாக பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

கன்னட திரையுலகின் இளம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். அவருக்கு கடந்த மாதம் அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் மரணம் கன்னட திரையுலகினரை மட்டுமின்றி கோடிக்கணக்கான ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் எப்போதும் தனது உடல் நலத்தின் மீது மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்பவர். நடனம், உடற்பயிற்சி உள்ளிட்டவைகளுக்காக உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே புனித் மறைவுக்கு பின்னர் கர்நாடகாவில் இதய பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகளவு உயர்ந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. மைசூர் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு 1200 பேர் இதய பரிசோதனை செய்து கொள்பவது வழக்கம். ஆனால் கடந்த திங்கட்கிழமை 1600 பேர் இதய பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த பரிசோதனை செய்பவர்களில் இளைஞர்கள் அதிகளவு உயர்ந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இது பற்றி மருத்துவர்கள் கூறும்போது, புனித் ராஜ்குமாரின் மரணத்தின் விளைவாகவே இது பரிசோதனை அதிகளவு செய்ப்படுகிறது. எனவே இளைஞர்கள் இதய பரிசோதனை செய்து கொள்வதே சிறந்தது என்றனர்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:Daily Thanthi


Tags:    

Similar News