ஸ்பைடர் மேன் வசூலை தட்டிதூக்கிய அவதார் 2 - இத்தனை பில்லியன் டாலரா?

உலகம் முழுவதும் கடந்த மாதம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 'த வே ஆப் வாட்டர்' ஹாலிவுட் திரைப்படம் வெளிவந்தது.

Update: 2023-01-19 14:14 GMT

உலகம் முழுவதும் கடந்த மாதம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 'த வே ஆப் வாட்டர்' ஹாலிவுட் திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் இந்திய ரூபாய் மதிப்பில் 15,460 கோடி, அமெரிக்காவில் மட்டும் 572 மில்லியன் வசூல், அமெரிக்கா தவிர மற்ற உலக நாடுகளில் 1.35 பில்லியன் வசூலித்துள்ளது.

மொத்தமாக தற்போது வரை 1.9 பில்லியன் யு.எஸ்.டாலர் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி வந்ததுள்ளது. உலக அளவில் அதிக வசூலை குவித்த படங்களில் இப்போது அவதார் 2, ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தின் வசூலை கடந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் மட்டும் இப்படம் 57 மில்லியன் வசூலை கடந்துள்ளது. இந்தியாவில் அதிக வசூலை குவித்த ஹாலிவுட் படங்களில் அவதார் 2 படம் இந்திய ரூபாய் மதிப்பு 463 கோடி வசூலித்து முதல் இடத்தில் உள்ளது.

Similar News