பாலா: ஆரி டைட்டில் வின்னர் ஆனால் ஒத்துக் கொள்ள மாட்டேன்!

பாலா: ஆரி டைட்டில் வின்னர் ஆனால் ஒத்துக் கொள்ள மாட்டேன்!;

Update: 2021-01-01 17:35 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 89 நாட்கள் ஆகும் நிலையில் இன்னும் நிகழ்ச்சி முடிவடைய பத்து நாட்களே உள்ளன. எனவே இந்த வாரம்  போட்டியாளர்கள் அனைவருக்கும் ப்ரீஸ் டாஸ்க்  நடைபெற்றது.  வீட்டில் உள்ள போட்டியாளர்களை காண அவர்களது உறவினர்கள் உள்ளே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று பாலாஜி ஆஜித்துடனும் ஷிவானியுடனும் பேசும் காட்சிகள் நேற்றைய எபிசோடில் இறுதியில் இருந்தது.

ஆஜித் பாலாஜி பேசிய உரையாடல்கள்:பாலா நான் மட்டும் டைட்டில் வின்னர் ஆக ஜெயித்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிரெண்டே மாறிவிடும் என்றும் இதுவரை கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் தான் டைட்டில் வின்னர் ஆக பட்டம் பெற்றார்கள் என்றும் ஆனால் நானோ ஆரியோ டைட்டில் வின்னர் ஆக மாறினால் இறங்கி விளையாடுபவர்கள் மட்டும் தான் இனிமேல் டைட்டில் வின் பண்ண முடியும் என்ற டிரெண்ட் ஏற்படும் என்றும் அதனால் அடுத்த சீசன் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறுகிறார். இதனை ஆஜித்தும் ஏற்றுக் கொண்டார் போல இருந்தது.

அடுத்த எபிசோடில் சிவானியிடம்  பாலா கூறும்போது:ஆரிக்கு நல்ல பொறுமையும் புரிதலும் இருக்கின்றது. அவர் கெட்டவர் என்று சொல்லவில்லை ஆனால் அதே நேரத்தில் அவர் நல்லவரும் இல்லை. தனது பக்கம் இருக்கும் தவறுகளை மறைப்பதால் அவரை நல்லவர் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரி தனக்கு ஒரு விஷயம் தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தவறுகளை மறைத்து மற்றவர்களின் தவறுகளை சுட்டி காட்டுகிறார்.

அவரது நேர்மை அங்கேயே அடிபட்டு விட்டது என்று கூறுகிறார். மேலும் ஆரி வேற லெவல் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் எல்லோரும் ரம்யா தான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் அது உண்மை கிடையாது  என்றும் இந்த வீட்டிலே யார் டைட்டில் வின்னர் ஆனால் நான் வருத்தப்படுவேன் என்றால் அது ஆரி மட்டும் தான் இதை நான் கமல் சார் இடமே கூறுவேன் என்று கூறியிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்களும் ஆரியின் ரசிகர்களும்  அவர்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News