பாலச்சந்தர் மாணவரிடமிருந்து படமாகிறது மகா பெரியவா வாழ்கை!
பாம்பே சாணக்யா என்பவர் இயக்குனர் பாலசந்தரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர்.
பாம்பே சாணக்யா என்பவர் இயக்குனர் பாலசந்தரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் தற்போது பரமாச்சாரியார் மஹாசுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை நெடுந்தொடராக இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தேன்மொழியால், நான் அவன் இல்லை, காமெடி காலனி, சாந்தி நிலையம் ஆகிய சீரியல்களில் பாம்பே சாணக்யா பணியாற்றி இருக்கிறார். பரமாச்சாரியார் மஹாசுவாமிகள் காஞ்சியில் மகா பெரியவா என்று அழைக்கப்படுபவர். இதுகுறித்து சாணக்யா, நான் ஏற்கனவே இந்திய சுகந்திரத்திற்கு முன் அக்ரஹார வாழ்கை முறையை கர்மா என்ற சிரியலில் இயக்கிருந்தேன் அந்த சீரியலுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அப்போதே பலரும் என்னிடம் மகா பெரியவா பற்றி சீரியல் இயக்க சொல்லி கேட்டிருந்தேன்.
மகா பெரியவருக்கு பாகுபாடு இல்லை. இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் என பல மதத்தினரும் அவரை பின்பற்றுகின்றனர், பட்டியலின மக்கள் வசிக்கும் இடங்களுக்கும் சென்றிருக்கிறார்.மகா பெரியவரின் போதனைகள் அடுத்த தலைமுறைக்கு கொன்றுசெல்லும் நோக்கில், இந்த தொடரை நான்கு தலைமுறைகள் கொண்ட ஒரு குடும்ப கதையாக இயக்கிவருகிறேன்.
எனவே, ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு மடடும் என்றில்லாமல் அனைவருக்கும் சென்று சேரும்படி இந்த சீரியலை உருவாக்கியுள்ளேன் என்று அண்மையில் பேட்டி அளித்துள்ளார் பாம்பே சாணக்யா.