சிவானியிடம் கண்ணீர் விட்டு அழும் பாலாஜி..! ஏன் தெரியுமா..?

சிவானியிடம் கண்ணீர் விட்டு அழும் பாலாஜி..! ஏன் தெரியுமா..?;

Update: 2020-12-09 17:15 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் வகையில் கடந்த வாரம் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல்ஹாசன், பாலாஜி தவறுகளைச் சுட்டிக் காட்டினார். அந்த வகையில் அவருக்கு குறும்படமும் போடப்பட்டது.

மேலும்  சனம், பாலா மோதலின்போது பாலா தன்னைத்தானே செருப்பால் அடித்த விவகாரம் குறித்து இது ஒரு வயலன்ஸ் என்று கடுமையான வார்த்தையை கமல் பயன்படுத்தினார். அதனிடையே பாலாஜிக்கு மெண்டல் பிளாக் என்று கூறியது பாலாஜியை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

இது குறித்து இன்றைய புரமோவில் பாலாஜி ஷிவானியிடம் புலம்புகிறார். கமல்சார் மெண்டல் பிளாக் எனக்கு இருக்கின்றது என்று சொன்னபோது பாலாவுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று யாராவது எனக்கு சப்போர்ட் செய்தார்களா அந்த நேரத்தில் நான் எந்த அளவுக்கு அதிகப்பிரசங்கி மாதிரி தெரிஞ்சிருப்பேன் என்று பாலா கூறியபோது அவரது கண்ணில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

சோம், மற்றும் அர்ச்சனா ஆகியோர் மைக்கை கழட்டி பேசியதற்கெல்லாம் குறும்படம் போடாத கமல், குரூப் என வெளிப்படையாக பச்சை குழந்தைக்கு கூட தெரியும் வகையில் விளையாடி வரும் அர்ச்சனா குரூப்புக்கு ஒரு குறும்படம் கூட போடாத கமல், ஒவ்வொரு வாரமும் பாலாஜியை மட்டும் டார்கெட் செய்வது பார்வையாளர்களும் சற்று அதிருப்தியை தருவதாக தெரிகிறது என பலரும் அவர்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News