வெளியானது பாலகிருஷ்ணா 107 படத்தின் போஸ்டர் - ரீலிஸ் எப்போது?
பாலகிருஷ்ணாவின் 107வது படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணாவின் 107வது படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திராவின் மிகப்பெரும் நடிகர் பாலகிருஷ்ணா தற்பொழுது தனது 107 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் புதிய போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது கையில் வாளுடன் ஆக்ரோஷமாக இருக்கும் போஸ்டர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இயக்குனர் கோபிசந்த் மாலிலேனி இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார், தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த வருடம் பாலகிருஷ்ணாவின் அப்பா மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.