பத்து தல கேங்ஸ்டர் - சிம்புவின் வைரல் புகைப்படங்கள்
'பத்து தல' படத்தின் படப்பிடிப்பில் சிம்பு வெளியிட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'பத்து தல' படத்தின் படப்பிடிப்பில் சிம்பு வெளியிட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்பொழுது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் நடிக்கும் படம் 'பத்து தல'
இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் படத்தில் டான் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார், இந்த நிலையில் பத்து தல படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது, அதனை சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் வரும் டிசம்பர் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.