'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிள் பற்றிய அட்டகாசமான அப்டேட்'டை படக்குழுவினர் கசிந்துள்ளனர்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடம் பூஜா ஹெக்டே, டைரக்டர் செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். இசை முன்னணி இசையமைப்பாளர் அனிருத்.
இப்படத்தின் போஸ்டர்கள் மட்டும் வெளியான நிலையில் முதல் சிங்கள் எனப்படும் பாடல் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் வரும் தீபாவளி அன்று விஜய்'யின் 'பீஸ்ட்' முதல் சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி என கொண்டாடி வருகின்றனர்.