'சூர்யா 40' படத்தில் இணைந்த பாகுபலி பட பிரபலம்!

'சூர்யா 40' படத்தில் இணைந்த பாகுபலி பட பிரபலம்!;

Update: 2021-01-29 16:10 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. அந்த வகையில் சூரரை போற்று என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது.

இந்த படத்தில் சூர்யா முதலமைச்சராக நடிக்க இருப்பதாக ஒரு வதந்தி கிளம்பிய நிலையில் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இன்று பகல் 12 மணிக்கு இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் பாண்டிராஜ் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

எனவே இயக்குனர் பாண்டிராஜ் கூறியபடி ட்விட்டர் பக்கத்தில்  சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் சத்யராஜ் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று வந்த தகவல் படி சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படத்தில் நடித்து  முடித்துள்ள கதாநாயகி பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது சூர்யாவுடன் சத்யராஜ் இணைந்திருப்பது சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News