#BiggBoss4 பிக்பாஸ் அனிதாவின் பதிவு: ரசிகர்களின் தெறிக்கும் கமெண்டுகள்!

#BiggBoss4 பிக்பாஸ் அனிதாவின் பதிவு: ரசிகர்களின் தெறிக்கும் கமெண்டுகள்!

Update: 2021-01-21 17:33 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் அனிதா சம்பத்  மற்றும் சனம்ஷெட்டி என்பதும், இருவருமே அவர்கள் மனதில் தோன்றியதை தைரியமாக பேசியதால் சர்ச்சைக்கு உள்ளானார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும் பிக்பாஸ் வீட்டில் இருவரும் சிறந்த தோழிகளாக இருந்தனர் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் தங்களது நட்பை அனிதா மற்றும் சனம்ஷெட்டி தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அனிதா அவரது சமூக வலைத்தளத்தில் 'போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் தோழியுடன் நான்' என்று சனம்ஷெட்டியுடன் உள்ள ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்த சனம்ஷெட்டி கூறியதாவது: மிக்க நன்றி அனிதா. பிக்பாஸ் மூலம் ஒரு அன்பான தோழியை கண்டுபிடித்தது எனக்கு அதிர்ஷ்டம். நீங்கள் இங்கு செய்யும் எல்லாவற்றிலும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களை பற்றிய அழகிய நினைவுகள் எப்போதும் எனக்கு இருக்கும். நீங்கள் பெற்ற விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்த விருது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று பதிவு செய்துள்ளார்.

அனிதாவின் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட் அளித்து வரும் நிலையில் நீங்கள் இருவரும் தான் உண்மையான பிக் பாஸ் வின்னர்கள் என்றும், நிஜ சிங்கப்பெண்கள் என்றும், உங்கள் இருவரையும் நினைத்து பெருமைப்படுவதாகவும் பலர் பதிவு செய்து வருகின்றனர்.

Similar News