பிக்பாஸ்: இன்றைய ப்ரோமோவில் காதலுக்கு விளக்கம் அளித்த பாலாஜி குறுக்கிட்ட கமல் - ஏன் தெரியுமா..?
பிக்பாஸ்: இன்றைய ப்ரோமோவில் காதலுக்கு விளக்கம் அளித்த பாலாஜி குறுக்கிட்ட கமல் - ஏன் தெரியுமா..?
தமிழில் பிக்பாஸ் சீசன்-4 தொடங்கி இன்றோடு 50 நாட்கள் நிறைவடையும் நிலையில் பல சண்டைகளும், பிரச்சினைகளும், வாக்குவாதங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
அந்தவகையில் இன்று வந்த ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களுக்கு கூறுவது: இன்று நீங்கள் வீட்டிற்குள் வந்து 50 நாட்கள் ஆகிறது என பேச்சை தொடங்கி அதற்கான உங்களுடைய பங்களிப்பு என்ன என்பதை சுருக்கமாக ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும் என கமல் கூறுகிறார்.
இதனை அடுத்து முதலில் எழுந்த வந்த பாலாஜி இந்த வீட்டில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்து இருக்கின்றேன் எப்படி நடக்க கூடாது என்பதையும் சொல்லிக் கொள்கின்றேன் என்று ஆரம்பித்து ஆணும் பெண்ணும் ஒன்றாக பழகினால் அது காதல் கிடையாது என்பதையும் சொல்லிக் கொடுத்து இருக்கின்றேன் என்று பாலாஜி கூற அப்போது குறுக்கிட்ட கமல்ஹாசன் நீங்கள் வேகமாக எண்ணுகிறீர்களா இல்லையே என்று கூற அப்போது போட்டியாளர்கள் அனைவரும் சிரிப்பது போன்று ப்ரோமோ இருந்தது.இதனிடையே நேற்று வந்த நிகழ்ச்சியிலும், இன்று வந்த ப்ரோமோ விலும் கமலஹாசன் பாலாஜியை குறை கூறுவது போல கலாய்க்கிறார் என ரசிகர்கள் அனைவரும் அவர்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.