பிக்பாஸ்: பாலாக்கு குறும்படம்.. ஏன் தெரியுமா.?

பிக்பாஸ்: பாலாக்கு குறும்படம்.. ஏன் தெரியுமா.?;

Update: 2021-01-02 16:58 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று 90-வது நாட்கள் ஆகும் நிலையில் நேற்று ஆரி மற்றும் பாலாஜி இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது என்பதும் இந்த வாக்குவாதத்தின் போது பாலாஜியை ஆரி 'சோம்பேறி' என்று ஒரு வார்த்தை கூறி விட்டார் என்பது பாலாக்கு மிகவும் கோபத்தை உண்டாக்கியது. மேலும் தன்னை சோம்பேறி என்று கூறியதை அடுத்து பாலா பொங்கி எழுந்தார். என்னை எப்படி நீங்கள் சோம்பேறி என்று கூறலாம் இந்த வீட்டில் நான் உழைப்பை கொட்டி உள்ளேன்.

இந்த வீட்டில் யாரும் சோம்பேறி இல்லை அனைவருமே உழைப்பை சிந்தி உள்ளார்கள் என்றும், உடனடியாக நீங்கள் சோம்பேறி என்ற வார்த்தையை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். அதன் பின் ஆரி அவரது தவறை உணர்ந்து சோம்பேறி என்ற வார்த்தையை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஆரி மற்றும் பாலா இடையே மோதல் வந்தது.

அப்போதும் பாலா, சோம்பேறி குறித்து தன்னை கூறியதற்கு ஆவேசமாக பேசினார். சோம்பேறி என்ற வார்த்தையை நீங்கள் கூறியதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அப்போது ஆரி ஏற்கனவே நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன் என்று கூறியபோது மன்னிப்பு எல்லாம் கேட்கவில்லை, வாபஸ் வாங்குவதாக மட்டும்தான் கூறினீர்கள், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். எனவே தற்போது சமூக வலைத்தளங்களில் குறும்படம் போட்டு வரும் நெட்டிசன்கள், பாலாவிடம் ஆரி மன்னிப்பு கேட்ட வீடியோவையும் குறும்படமாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். இதைப்பார்த்து இன்றைய நிகழ்ச்சியில்  குறும்படம் வருமா என்று பார்ப்போம்.

Similar News