பிக்பாஸ்: கேப்டன் ஆகிய அன்பு குரூப் நபர்: பதட்டத்தில் போட்டியாளர்கள்.!

பிக்பாஸ்: கேப்டன் ஆகிய அன்பு குரூப் நபர்: பதட்டத்தில் போட்டியாளர்கள்.!;

Update: 2020-12-18 15:57 GMT

பிக்பாஸ் வீட்டில்  நேற்றய நிலையில்  சில பிரச்சனைகள் வந்த நிலையில் இன்று வந்த முதல் ப்ரோமோவில் கேப்டன் டாஸ்க்கில் அர்ச்சனா வெற்றி பெற்று விட்டதால் அவர் அடுத்த வார கேப்டன் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கேப்டன் டாஸ்க்கில் பாலாஜி, அர்ச்சனா மற்றும் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மூவருமே வெறித்தனமாக விளையாடினாலும் டாஸ்க்கை அர்ச்சனா தான் முதலில் முடித்து வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவர் அடுத்த கேப்டனாக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் அர்ச்சனா கேப்டன் ஆகி விட்டால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதற்கு முன்னர் அர்ச்சனா கேப்டனாக இருக்கும் போது அவரது ஆதிக்கம் தூள் பறந்தது.

ஆனால் அதே நேரத்தில் அர்ச்சனா இந்த வாரம் நாமினேஷனில் உள்ளார் என்பதும் அவர் ஒருவேளை அவர் வெளியேறி விட்டால் கேப்டனாக வாய்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தனக்கென ஒரு குரூப் வைத்துக்கொண்டு ஒரு சிலரின் ஆதரவால் வீட்டில் உள்ள மற்றவர்களை ஆதிக்கம் செய்து வருவதாக அர்ச்சனா மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டை நெட்டிசன்கள் பார்வையாளர்களும் வைத்துள்ளனர்.

கமல்ஹாசன் கூட அவ்வப்போது குரூப்பிஸம் என்ற வார்த்தைகளை அர்ச்சனாவிடம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இது பற்றிய முழுமையான தகவலை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.
 

 


 

Similar News